Ambarish ( அம்பரிஷ் ) | Indian Mythological Stories | Tamil Stories

அம்பரீஷன்
அம்பரீஷன்
அம்பரீஷன் என்னும் அரசன்
அரசர்களுக்கெல்லாம் பேரரசனாகவும்,
மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாகவும் விளங்கினான்..
அவனின் பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு
தன் சுதர்ஷன சக்கரத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார்..
அதனால் நாடு பெரும் சுபிட்சமடைந்தது..
நாட்டு மக்களும் மிகவும் முன்னேற்றம் அடைந்தனர்..
ஒரு முறை நாரத முனிவர் இந்திரனின், தேவலோகத்திற்கு விஜயம் செய்தார்..
நாராயணா.. நாராயணா..
நாராயணா.. நாராயணா..
இந்திரா!, நீ அரசன் அம்பரீஷனைப் பற்றிக் கேள்விப்பட்டாயா?
அவரை நம் மகா விஷ்ணுவின் சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம் தான் பாதுகாக்கின்றதாமே
ஆமாம் நாரதரே.. நானும் அவரை பற்றிக் கேள்விப் பட்டேன்..
அவர் மகாவிஷ்ணுவிற்காக நோன்பு நடத்தப்போவதாகவும் அறிந்தேன்
இந்திரா, அம்பரீசன் மட்டும் அந்த நோன்பினை வெற்றிகரமாக முடித்துவிட்டானென்றால்
அதன்பிறகு அவன் உன்னை விடவும் பலசாலி ஆகிவிடுவான்..
இப்போதே சொல்லிவிட்டேன்.. அதன்பிறகு நீ என்னை குற்றம் சொல்லக்கூடாது..
நாராயண.. நாராயண
என்று சொல்லிய நாரதர் அங்கிருந்து மறைந்தார்..
என்ன செய்யலாம் என இந்திரன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது
அங்கே துர்வாச முனிவர் வருகைப் புரிந்தார்..
துர்வாச முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர்..
மிகக் கோபக்காரர்..
என்ன செய்வது என்று யோசித்துவிட்ட இந்திரன்
துர்வாச முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான்..
துர்வாச முனிவர் ஆச்சரியமடைந்தார்..
மகாமுனிவரே! தங்கள் வருகையால் என் இருப்பிடம் புனிதமாகிறது
என் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு.
உன் பணிவு கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்..
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் இந்திரா?
மாமுனிவரே! நீங்கள் அரசன் அம்பரீஷனின் நோன்பினைப் பற்றி கேள்விப்பட்டிர்களா?
அது அவர் தான் உண்மையான விஷ்ணு பக்தன் என்று காட்டிக்கொள்வதற்காகவும் இருக்கலாம்..
அல்லது தான் ஒரு பேரரசன் என்பதை பறைசாற்றும் நோக்கமாகவும் இருக்கலாம்..
அம்பரீஷனின் நோன்பு இந்த ஆண்டுடன் நிறைவு பெறப்போகிறது..
நாளை அவர் நோன்பினை முடித்துக் கொள்ளப் போகிறார்..
ஆம் உண்மை தான்..
உண்மையில் அது மிகப்பெரிய விஷயம் தான்..