Bhasmasura (பஸ்மாசுரன்) | Indian Mythological Stories | Tamil Stories
Log in
YouTube
by
gonerillearaen
பத்மாசுரன்
பத்மாசுரன்
பத்மாசுரன் மிகவும் சக்திவாய்ந்த அசுரன்..
அவன் மிகவும் பெரிய உருவம் படைத்தவனாகவும்,
வலுவானவனாகவும் இருந்தான்..
ஆனால் அதே நேரத்தில் முட்டாளாகவும் இருந்தான்..
பத்மாசுரன் ஒருமுறை
ஒரு வனத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தான்..
நான் எப்படி மிகவும் சக்திவாய்ந்த அரசனாக முடியும்..
அதற்கு ஏதாவது ஒரு குறுக்குவழியைக் கையாண்டால் தான் முடியும்..
இதற்கு யார் எனக்கு உதவி செய்வார்கள்.. ம்..
என்று நினைத்தபடியே வந்து கொண்டிருந்த பத்மாசுரன் முன்பாக
நாரதர் வந்து கொண்டிருந்தார்..
நாராயணா ...! நாராயணா ...!
"ஓ, இங்கே நாரதர் எதிரே வந்து கொண்டிருக்கிறார்..
அவருக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியும்
"வணங்குகிறேன் நாரதரே!
நான் எப்படி சக்தி வாய்ந்தவனாக மாறமுடியும்?
இல்லை.. இல்லை..
எப்படி மாறினாலும் என்னை விட வலுவான அரசர்கள் என்னை தோற்கடித்துவிடுவார்களே"
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
" பத்மாசுரா.. சிவபெருமானை நினைத்து தவம் செய்..
அவர் கண்டிப்பாக நீ கேட்கும் எந்த வரத்தையும் கொடுப்பார்"
என்று சொல்ல.. பத்மாசுரன் நாரதரை வணங்கிவிட்டு
அடர்ந்த காடுகள் நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்..
ஒரு அமைதியான இடம் வந்ததும்,
அங்கிருந்த ஒரு அரச மரத்தின் கீழ் அமர்ந்து
சிவபெருமானை வழிபடத் தொடங்கினான்..
பல ஆண்டுகள் கடந்த பின்,
சிவபெருமான் அவன் முன் தோன்றினார்.
"ஓம் நமசிவாய ...!
ஓம் நமசிவாய ...!
ஓம் நமசிவாய ..!
ஓம் நமசிவாய ...!
ஓம் நமசிவாய ...!
பத்மாசுரா.. உன் தவத்தை மெச்சுகின்றேன்..
உன் கண்களைத் திறந்து பார்
உனக்கு என்ன வரம் வேண்டும் பத்மாசுரா
என் இறைவா! எனக்கு சாவு என்பதே வரக்கூடாது"