சிவராத்ரி கதை| Story of Shivratri in Tamil | Maha Shivaratri Story Tamil | Hindu Stories Tamil
Log in
YouTube
by
gonerillearaen
மகாசிவராத்திரி விரதத்தோட சிறப்புகளை பத்தி சொல்லாத புராணங்களே கிடையாது.
சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட திருநாளையே
மகாசிவராத்திரியாக கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த
நிகழ்வு எங்கு நடந்தது என்றும் மகாசிவராத்திரி விரதம் மற்றும் வழிபாடு
தோன்றிய தளம் எது என்றும் நிறைய பேருக்கு தெரியாது. சிவராத்திரின்னு சொன்ன உடனே
நம்மளுடைய நினைவுக்கு வருவது இரவு முழுவதும் கண் விழிப்பதும் லிங்கங்களுக்கு
செய்யப்படும் பல வகையான அபிஷேகங்களும் நான்கு கால பூஜையும் தான். யுகம் யுகமா
நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அறிந்தும் அறியாமலும்
செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் கிடைக்க மகாசிவராத்திரி அன்னைக்கு விரதம்
இருந்து சிவபெருமானை வணங்கினால் மோட்சம் கிடைக்கும். சிவபெருமானின் அருளை
பெறுவதற்கும் பாவங்கள்ல் இருந்து விடுபடுவதற்கும் ஏற்ற மிகச்சிறந்த விரத
நாளாக சொல்லப்படுவது மகாசிவராத்திரி நாள்தான். உலகிற்கே தலைவனாக இருக்கக்கூடிய
சிவபெருமானின் சிவபூஜையின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய நாளாக இருக்கும்
மகாசிவராத்திரி வழிபாடு எந்த தளத்தில் தோன்றியது என்றும் சிவராத்திரி வழிபாடு
யாரால் தொடங்கப்பட்டது என்றும் மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு
செய்யப்படும் நான்கு கால பூஜைகள் என்னென்ன என்பதையும் அந்த நான்கு கால பூஜைகளை
பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது
என்பதையும் தெரிந்து கொள்வோம். மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை
தளத்தில்தான். இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்தோடு சிவபெருமான் லிங்க வடிவில்
திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்கள்ல் சொல்லப்பட்டுள்ளது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்கள்ல யார் பெரியவர் என்ற சண்டை வந்தபோது
அவங்களோட சண்டையை தீர்த்து வைக்க தேவர்கள் எல்லோருமே சிவபெருமான் கிட்ட
முறையிட்டாங்க. அவங்களோட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் மிகப்பெரிய ஜோதி
வடிவமாக விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய இருவரின் முன்பும் தோன்றினார். அந்த ஜோதி
வடிவம் மண்ணுக்கும் மின்னுக்கும் பரவி மிக பிரம்மாண்டமா காட்சி யளித்தது. ஜுவாலைய
வடிவத்தை கண்ட காக்கும் கடவுளான மகாவிஷ்ணு பன்றியின் மீது அமர்ந்து அடியை காண
சென்றார். படைக்கும் கடவுளான பிரம்மா வாக்கின் மீது அமர்ந்து முடியை காண
சென்றார். ஆதியும் அந்தமும் அற்ற அந்த ஜோதியை அவர்கள் தொடர்ந்தார்கள். தேடல் பல
யுகங்களா தொடர்ந்தன. இருவருமே அலைந்து திரிந்து கலைத்து போனார்கள். அடிமுடி காண
முடியாத ஜோதி வடிவாக தோன்றியது ஈசனோட செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த
மகாவிஷ்ணு தன்னோட முயற்சியை கைவிட்டுட்டு திரும்ப வந்துட்டார். அப்போ அவர்கிட்ட
இருந்த ஆணவம் காணாமல் போய்விட்டது. ஆனால் பிரம்மா கிட்ட இருந்த அகந்தை மட்டும்
நீங்கவில்லை. உயர பறக்க முடியாம சோர்வடைந்து திரும்பி கொண்டிருந்த பிரம்மா
ஒரு தாளம்பூவை பார்க்கிறார். அந்த தாளம்பூ ஈசனோட முடியில் இருந்து விழுந்து பலநூறு
யுகங்களா கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார். ஜோதி வடிவத்தின் முடியை தான்
கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாளம்பூ கிட்ட பிரம்மா கேட்டுக்கொண்டார்.
தாளம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாளம்பூ பொய்சாட்சி
சொன்னதும் கோபப்பட்ட சிவபெருமான் நெருப்பு பிளம்பில் இருந்து வெடித்து கொண்டு லிங்க
வடிவில் வெளியில் வந்தார். விஷ்ணுவுக்கும் தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம்