Dhruva (துருவா) | Indian Mythological Stories | Tamil Stories

பக்த துருவன்
வெகு காலத்திற்கு முன்பு உத்தனபாதன் என்று ஒரு அரசன் இருந்தான்
அவனுக்கு சுனிதி, சுருஷி என்று இரண்டு மனைவிகள் இருந்தனர்.
சுனிதிக்கு துருவன் என்ற மகனும்,
சுருஷிக்கு உத்தமன் என்ற மகனும் இருந்தனர்..
இளைய மனைவி சுருஷி மிகவும் அழகாக இருப்பாள்..
எனவே, அரசன் அவளின் அழகில் மயங்கி
எப்போதும் அவளது அரண்மனையிலேயே தங்கி இருந்தார்.
அதனால் மாதத்திற்கு ஒரு முறை கூட சுனிதியின் அரண்மனைக்குச் செல்லவில்லை...
ஒரு நாள், துருவன் சுருஷியின் அரண்மனைக்கு வந்த போது,
உத்தமன் தந்தையின் மடியில் அமர்ந்து,
விடுகதை சொல்லி கலகலவென சிரித்தபடி இருந்தான்.
உத்தனபாதன் அவனை தன் நெஞ்சில் அணைத்தபடியே
அவனுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த துருவனும்
வேகமாக சென்று தன் தந்தையின் மேலேறி
அவரின் இடதுபுற மடியில் அமர்ந்தான்..
ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுருஷி கோபம் கொண்டு
துருவனின் தோளினைப் பிடித்து இழுத்து அவனிடம்
"நீ எங்கே இங்கே வந்தாய் துருவா,
என்று கேட்டபடியே வலுவாய் இழுக்க..
துருவன் தந்தையை இறுக்கிப் பிடிக்க..
தந்தையிடம் இருந்து பிரிக்கப்படுகிறான்..
"நான் அப்பாவின் மடியில் உட்கார வேண்டும்."
நான் சொல்வதை கவனி துருவா..
நீ என் மகன் அல்ல,
அதுமட்டுமில்லாமல்
அரசரின் மடியில அமர என் மகனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது..
அதனால் அடுத்த பிறவியிலாவது
நீ என் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று
கடவுளிடம் வேண்டிக்கொள் துருவா
அப்பொழுது தான் அரசரின் மடியில் அமரும் தகுதி உனக்கு கிடைக்கும்
அதனால் இனி இங்கே வராதே
போ.. போய் விடு..
சிற்றன்னையின் கொடூரமான வார்த்தைகளினால் காயப்பட்ட துருவன்
கண்களில் கண்ணீர் மல்க தனது தந்தையைப் பார்த்தான்..
சத்தமாக அழுது புலம்பியபடியே
தனது தாயாரை சந்திக்க ஓடினான் துருவன்..
சுனிதி தூரத்திலேயே அவன் வருகையைக் கண்டு