Krishna And Fruit Seller ( கிருஷ்ணாவும் பழ வியாபாரியும் ) | Sri Krishna Tamil Stories

ஒருநாள் கிருஷ்ணன்
பலராமன் மற்றும் நண்பர்களுடன்
விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது…
தெருவில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது…
பழம்மா… பழம்… பழம் வாங்கலியோ பழம்… பழம்மா…
வாழைப்பழம், மாம்பழம், கமலாப் பழம்… கொய்யாப் பழம்…
கிருஷ்ணன் அவற்றில் சிலவற்றை உடனே வாங்க விரும்பினான்…
பழம் விற்பவள் கிருஷ்ணரை நேரில் கண்டதும்…
அவன் தோற்றத்தில் மயங்கிப் போனாள்…
அன்பு பெண்மணியே… உண்ண எனக்கு பழங்கள் வேண்டும்…
ஏதாவது பழங்கள் தருவாயா?
பதிலுக்கு நீ என்ன தருவாய்?
கிருஷ்ணன் உடனே சில பழங்களை வாங்க விரும்பினான்…
ஆனால் அவனிடம் பணம் ஏதும் இல்லை…
ஆவல் பொங்கும் அவனுடைய கண்களில்
நெல்மணிகள் வைக்கப்பட்டுள்ள மூட்டைகள் தென்பட்டது…
கையளவு நெல்மணிகளை வாரிக்கொண்டு… தெருப்பக்கம் போனான்…
பழம் விற்பவள் வெளியே வாசலில் காத்துக் கொண்டிருந்தாள்…
நான் உனக்காக நிறைய நெல்மணிகள் எடுத்து வந்திருக்கிறேன்…
அதற்கு பதிலாக எனக்கு பழங்கள் தா…
சிறுவனே உன் கைகளில் நெல்மணிகள் ஏதுமில்லையே?
கிருஷ்ணன் தன் கைகளில்
தான் கொண்டு வந்த நெல்மணிகள் இல்லாததை
ஆச்சரியத்துடன் பார்த்தான்…
பழம் விற்பவள் கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்து…
என் மடி மேல் அமர்ந்து
என்னை அம்மா என்று ஒருமுறை நீ அழைத்தால் போதும்..
எல்லாப் பழங்களையும் உனக்கே தருவேன்…
கிருஷ்ணன் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான்…
உடனே தாவி ஏறி அவளது மடிமேல் அமர்ந்தபடி..
அம்மா…
அவன் உடனே மடிமேல் இருந்து கீழே தாவி கேட்டான்..
இப்பொழுது நீ எனக்குப் பழங்கள் தரவேண்டும்…
பழம் விற்பவள் உள்ளம் குளிர்ந்து…
அவளது கூடையில் உள்ள
எல்லாப்பழங்களையும் அவனுக்கு அளித்தாள்…
கிருஷ்ணன் எல்லாப் பழங்களையும் எடுத்து…
மார்போடு அணைத்தபடி… சந்தோஷத்துடன் துள்ளிகுதித்துச் சென்றான்.. .
பழம் விற்பவள் தனது வீட்டிற்கு சென்று…