Krishna And Govardhan(கிருஷ்ணரும் கோவர்தன மலையும்) | Sri Krishna Tamil Stories
Log in
YouTube
by
gonerillearaen
ஒவ்வொரு வருடமும் படையல் போடுவது
பிருந்தாவனத்தில் வசிப்பவர்களின் வழக்கம்…
இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்..
கிருஷ்ணனின் இல்லத்திலும் எல்லோரும் மும்முரமாக இருந்தார்கள்…
படையல் படைப்பது சம்பந்தமாக
ஊர் பெரியவர்களிடம் நந்தகோபன் பேசிக்கொண்டிருந்த போது…
கிருஷ்ணன் கேட்டான்..
அப்பா…
நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்…
அதைப் பற்றி எனக்கு விளக்கமாக கூறுங்களேன்…
இந்திரன் என்னும் கடவுளை வணங்கவே இந்த விழா ஏற்பாடுகள்…
மழைக் கடவுளான இந்திரனின் ஆசியைப் பெறவே…
இந்த நன்றி பாராட்டும் வைபவம் நடக்கிறது… புரிகிறதா…
நீங்கள் எதை வைத்து மழை தருபவன் இந்திரன் என்று தீர்மானித்தீர்கள்?
நிச்சயமாக… அவர்தான் நமக்கு நல்ல வளமான வாழ்வைத் தருபவர்…
அவர் தான் மேகங்களை ஆளுகின்ற மழைக் கடவுள்…
அதனால் அவரது ஆசியால் தான் நமக்கு வருடா வருடம் மழை கிடைக்கிறது..
இல்லை தந்தையே… அப்படி நினைப்பது தவறு…
மேகங்களைத் தவிர…
நமது ஊரிலிருக்கும் மலை தான் நமக்கு துணை புரிகின்றது..
பசுமையான மலைதான் மழைக்கு காரணமாக அமைகின்றது…
ஆம் தந்தையே நமது கோவர்த்தன மலைதான்..
நல்ல மூலிகைகள், தாவரங்களைத் தருகிறது.. .
அது மட்டுமல்லாமல், தூய நீர், தூய்மையான காற்று…
பசுக்களுக்கு புற்களை தருவதும் அது தான்…
எனவே கோவர்த்தன மலையைத் தான் நாம் வணங்க வேண்டும்..
இந்திரனை அல்ல…
கிருஷ்ணனுடைய இந்த பேச்சு… கோபர்களை சிந்திக்க வைத்தது…
அதனால் இந்திரனுக்கு பதிலாக… கோவர்த்தன மலையை வணங்க முடிவெடுத்தார்கள்..
இது இந்திரனின் பெருமையை குறைக்க, அவனது கோபத்தை தூண்டிவிட்டது..
அவமானமடைந்த இந்திரன் கோபர்களை தண்டிக்க எண்ணினான்..
என்னுடைய பெருமைகளைப் பேசும் விழாவை…
இந்த சூழ்ச்சி மிக்க சிறுவனா நிறுத்தினான்…
கடும் மழையையும், இடிமின்னல்களையும், பிருந்தாவனத்திற்கு அனுப்புவேன்…
அவைகள் பிருந்தாவனத்தையே நாசமாக்கும்…
யார் அவர்களை காப்பாற்றுவார்கள் என பார்க்கிறேன்…
ஒளிமயமாக இருந்த பிருந்தாவனம் இருண்டு போனது…
எங்கிருந்தோ வந்த இடியுடன் கூடிய மழை மேகங்கள்…
சூரியனை எங்கும் காணாமல் செய்து விட்டது…