Krishna And His Cosmic Form ( கிருஷ்ணா மண்ணுண்ட கதை ) | Sri Krishna Tamil Stories
Log in
YouTube
by
gonerillearaen
கோகுலம் என்பது யமுனா நதிக்கரையில் ஒரு சிறு கிராமம்…
கோகுலத்தில் பெரும்பாலும் மாடுமேய்க்கும் இடையர்களே வாழ்ந்து வந்தனர்…
நந்தகோபால் இடையர்களுக்கெல்லாம் தலைவன்…
குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணனின் வளர்ச்சி…
யசோதையும், நந்தகோபாலும் கனவு கண்டது போலவே அமைந்திருந்தது…
ஒரு நாள் கிருஷ்ணனை அவனது விளையாட்டுப் பொருட்களுடன்…
விளையாடசொல்லிவிட்டு சமையலறை பக்கம் போனாள் யசோதை…
சுற்றும் முற்றும் பார்த்த குறும்புக்கார கிருஷ்ணன்…
மெல்ல மெல்ல நடந்து சென்று கதவுகளைத் தாண்டி …
தோட்டத்திற்குள் மண்ணில் விளையாட சென்று விட்டான்…
சமையலறையிலிருந்து வெளியே வந்த யசோதை
கிருஷ்ணனை வீட்டினுள்ளே எங்கே தேடியும் காணாமல்…
வெளியே வந்து பார்த்தாள்…
கிருஷ்ணா… குறும்பு செய்யும் கிருஷ்ணா…
அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்…
அவளது குரலைக் கேட்ட கிருஷ்ணன்… மெல்ல அவளருகே வந்தான்..
வாயில் என்ன வைத்திருக்கிறாய்?
அவளை பார்த்தபடி கிருஷ்ணன் தலையை மெல்ல இருபுறமும் அசைத்தான்…
இப்பொழுதே வாயை திறந்து காட்டு கிருஷ்ணா…
யசோதை பூமியையும், ஏழுகடல்களையும்,
மலைகளையும், பாலைவனங்களையும், சூரிய சந்திரர்களையும்,
வான் வெளியில் நட்சத்திரக்கூட்டங்களையும்,
முடிவில்லாத விண்வெளியையும், அகில உலகத்தையும் கண்டாள்…
கிருஷ்ணர் தன் சிறு வாயை மூடிக் கொண்டார்…
அவள் பயத்தோடும், ஆச்சரியத்தோடும், கலங்கிப் போனாள்…
என் கண்களை திறந்த படியே நான் ஒன்றும் கனவு காணவில்லையே…
என் முன் நடப்பவைகளை தானே நான் கண்கிறேன்…
அப்படியானால்
என் மகனின் தெய்வாம்சத்தினால் தான் இந்த காட்சிகளைக் கண்டிருக்க கூடும்…
தாய் யசோதா நடந்தவைகளை எல்லாம் மறந்தே போனாள்…
தன் குழந்தையை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றாள்..