Krishna And Twin Trees ( கிருஷ்ணரும் இரட்டை மரங்களும் ) | Sri Krishna Tamil Stories
Log in
YouTube
by
gonerillearaen
கிருஷ்ணன் விளையாடும் போது.. நிறைய தந்திரங்களை செய்து…
எல்லா சிறுவர்களையும் விட குறும்புக்காரனாக திகழ்ந்தான்…
அன்னை யசோதைக்கு அவனை சமாளிப்பதும் மிகவும் கடினமாக இருந்தது…
அவன் பேரில் நிறைய புகார்கள் வந்த வண்ணம் இருந்தன…
யசோதா என்வீட்டில் கிருஷ்ணன் வெண்ணெயை திருடி விட்டான்…
அம்மா… நானோ குள்ளமானவன்…
வெண்ணைப் பானையோ உயரத்தில் இருந்தது…
நான் எப்படி திருடமுடியும்?
கிருஷ்ணா… நாளுக்கு நாள் உன் குறும்புத் தனம் அதிகரித்து வருகிறது…
நான் உன்னை தண்டிக்கப் போகிறேன் பார்…
அவள் உடனே ஒரு துண்டுக் கயிற்றை எடுத்து…
இடுப்பிலே கட்டி மறு முனையினை ஒரு உரலில் கட்ட எண்ணினாள்…
ஆனால் அதன் அளவு சரியாக இல்லை..
மீண்டும் ஒரு துண்டை இணைத்துக் கட்டிப் போடப் போனாள்…
மறுபடியும் கயிறு இரண்டு அங்குலம் குறைந்தே காணப்பட்டது…
யசோதாவின் முயற்சி தோற்றதையும்,
அவளது சோர்வையும் கண்ட கண்ணன்…
அவளுக்காக மனமிறங்கி கயிற்றில் கட்டுப் பட்டான்…
கிருஷ்ணரைக் கட்டிப் போட்ட பின்னர்
தன் வீட்டு வேலைகளை கவனிக்க சென்றாள் யசோதை…
கிருஷ்ணன் மெல்ல நடந்து வர..
தன்னுடன் உரலும் உருண்டு வருவதைக் கண்டான்…
மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்து…
இரண்டு மரங்கள் அருகருகே இருப்பதையும்…
அவற்றிற்கு இடையில் சிறு இடைவெளி இருப்பதையும் கண்டான்…
உரலில் இருந்து விடுவித்துக் கொள்ள… ஒரு யுக்தி தோன்றியது…
அவன் தனக்குள்ளாகவே…
இப்போது நான் இந்த இரு மரங்களுக்கு இடையே புகுந்தால்…
என்னுடன் கட்டிய உரல் வெளியே வரமுடியாது…
எனது முழு பலத்தையும் உபயோகித்து உரலை இழுப்பேன்…
அப்போது கயிறும் அறுபடும்… நானும் விடுதலை ஆவேன்…
உரலை இழுத்தான் கிருஷ்ணன்…
அவன் நினைத்தது போல கயிறு அறுபட வில்லை…
மறுபடியும் பலமுடன் இழுத்தான்…
இம்முறை கயிறு அறுபடாமல்
இரண்டு மரங்களும்… பெரும் சத்தத்துடன் கீழே சாய்ந்தன…
என்ன ஆச்சர்யம்…
இரண்டு மரங்களிலில் இருந்தும் இரண்டு தேவர்கள் வெளியே வந்தார்கள்…
நாங்கள் குபேரனுடைய குமாரர்கள் ஆவோம்..