Kuselan (குசேலன்) | Indian Mythological Stories | Tamil Stories
Log in
YouTube
by
gonerillearaen
குசேலர்
குசேலர் கிருஷ்ணனின் நண்பரும் பக்தருமாவார்.
அவர் ஒரு பிராமணப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தார்..
அவர்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர்.
தாயே! எனக்கு இன்னும் பசிக்கிறது..
தயவு செய்து எனக்கு இன்னும் கொஞ்சம் உணவு தாருங்கள்"
சரி... இந்த உணவையும் எடுத்துக் கொள்..
நான் உன் தந்தையிடம் உனக்காக
இன்னும் சிறிது உணவுக் கேட்கிறேன்
குசேலரின் மனைவி தன் குழந்தைகளை ஆறுதல் படுத்தி
தூங்கச் செய்துவிட்டு, தன் கணவருக்காக காத்திருந்தார்..
அவரது கணவர் அன்றாடம் கோயிலில் செய்யப் படும் பூஜையை முடித்துவிட்டு,
வீட்டிற்குத் திரும்பினார்..
சுவாமி, நீங்களும், துவாரகையை ஆளும் பகவான் கிருஷ்ணனும்
நெருங்கிய நண்பர்கள் தானே..
அந்த கிருஷ்ணர் அழகிற்சிறந்த
செல்வ செழிப்பு மிக்க ருக்மிணியைத் தானே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்
நமக்கு பசி என்பது ஒரு விஷயம் அல்ல தான்..
ஆனால் நாம் நம் குழந்தைகளுக்காவது
போதுமான உணவு அளிக்க வேண்டுமல்லவா..
அதற்காக நான் என்ன செய்ய முடியும்?
நான் எவ்வளவு கடுமையாக உழைக்க முடியுமோ அவ்வளவு கடுமையாக உழைத்து தான் வருகிறேன்.
யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன்
நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்..
நம் குழந்தைக்களுக்காகவாவது
நீங்கள் பகவான் கிருஷ்ணரை சந்தித்துத் தான் ஆகவேண்டும்
ஆனால்.. எப்படி நான் என் நண்பனிடம் கேட்க முடியும்
அவரிடம் உணவையோ.. செல்வச் செழிப்பான வாழ்க்கையையோ கேட்கச் சொல்லவில்லை..
நம் பிள்ளைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ
அவருடைய ஆசீர்வாதத்தை மட்டும் தான் கேட்கிறேன்
நீ சொல்வது எனக்குப் புரிகிறது..
ஆனால் அவர் துவாரகாவிற்கே அரசர்..
அவரின் காவலர்கள் அவரைச் சந்திக்க
என்னை உள்ளே விடுவார்களா?
அப்படியே சந்தித்தாலும்
என் நண்பனுக்கு நான் என்ன கொண்டு செல்வது?"
சுவாமி, தங்கள் நண்பருக்கு அவல் என்றால் எப்போதும் பிரியம் என்று சொல்வீர்களே..
கொஞ்சம் பொறுத்திருங்கள்..
இதோ வந்துவிடுகிறேன்