Kuthirai Muttai | Paramartha Guru(பரமார்த்த குரு)In Tamil | Animation Stories
Log in
YouTube
by
gonerillearaen
டேய் முட்டாள்… என்ன பண்ற…
பாத்தா தெரியலை… மரம் வெட்டறேன்…
சரிப்பா… நுனி மரத்துல உட்கார்ந்துகிட்டு அடிமரத்தை வெட்டறியே…
எனக்கு எல்லாம் தெரியும்… உங்க வேலையை பார்த்துட்டு போங்க…
கிளை உடைஞ்சி கீழே விழப் போறடா….
ஐயோ… ஐயோ… ஐயோ… இடுப்புப் போச்சே…
என் வாய் முகூர்த்தம் விழுந்துட்டானே…
ஐயையோ இனிமே இங்கே நிக்கக் கூடாது...
இவரு சொன்ன உடனே கிளை உடைஞ்சி விழுந்திடுச்சே…
நிச்சயம் இவரு ஒரு முக்கால ஞானிதான்… ஐயா….
இங்க நின்னா குண்டங்கிட்ட அடி கிடைக்கும்… ஓடிப் போயிடலாம்…
ஐயா நில்லுங்க…
ம்.ஹூம்...நான் நிக்க மாட்டேன்…. நான் நிக்க மாட்டேன்….
ஐயா நில்லுங்க…
ம்.ஹூம்...நான் நிக்க மாட்டேன்…. நான் நிக்க மாட்டேன்….
ஐயா நில்லுங்க…
ம்.ஹூம்...நான் நிக்க மாட்டேன்…. நான் நிக்க மாட்டேன்….
ஐயா… முன் கூட்டியே கிளை ஒடியும்னு சொன்ன நீங்க
ஒரு முக்கால ஞானி…
எனக்கு நிறைய பணம் கிடைக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க…
ம்… இது… இவன் நிஜமாவே வடிகட்டுன முட்டாள் தான் போல இருக்கே…
அப்பனே…. அந்தணன் எதையும் வாங்காம ஆசிர்வாதம் பண்ணக்கூடாது…
என்ன வச்சிருக்க நீ...
ரெண்டு பணம் இருக்கு சாமி…இந்தாங்க…
இதே அறிவோட தீர்க்காயுசா இரு…
நிறைய பணம் கிடைக்கட்டும்… ஹ..ஹ..ஹ…
ஏய்… பொன்னம்மா…
இந்த கழுதைங்களையெல்லாம் கவனமா பாத்துக்க…
பூசணிக் கொடிய மேய்ஞ்சிடப் போகுது…
பூசணிக்காயை சந்தைக்கு கொண்டு போக
நான் வண்டியை எடுத்துட்டு வந்திடறேன்…
சரிங்க…
டேய்… மட்டி… அங்க பார்றா… மட்ட குதிரைங்கள…
நம்மக் கையிலயோ நிறையா காசு இல்ல…
அதனால இதுல ஒண்ணை புடிச்சிட்டுப் போயி குருநாதருக்குக் கொடுத்துட்டா…
சரியான யோசனை… வா… வா… விலை கேட்கலாம்…
ஐயா… ஐயா… இந்த மட்டகுதிரை ஒண்ணு என்ன விலை….
ம்… என்னடி… கழுதைங்களை போயி குதிரைன்னு சொல்றானுங்க...
அட அவங்களே சொல்லும் போது உனக்கென்ன…