Markandeya (மார்க்கண்டேயன்) | Indian Mythological Stories | Tamil Stories
Log in
YouTube
by
gonerillearaen
மார்க்கண்டேயன்
முன்னொரு காலத்தில்
மிருகண்டர் என்ற ஒரு ரிஷியும்
அவரது மனைவி மருதவதியும் வாழ்ந்து வந்தனர்..
அவர்களுக்கு வெகுநாட்களாகவே குழந்தை இல்லை..
மிருகண்டர் சிவபெருமானை நோக்கி ஒரு கடுந்தவம் மேற்கொண்டார்..
அவரின் கடுந்தவத்தினை மெச்சிய சிவ பெருமான்
மிருகண்டரின் முன் தோன்றினார்.
மிருகண்டா.. உன் பக்தியைக் கண்டு நான் மகிழ்கிறேன்..
நீ விரும்பும் வரத்தைக் கேள்.
இறைவா! குழந்தை செல்வம் இல்லாத எனக்கு
ஒரு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும்.."
"நல்லவனாக அறிவுச்சுடராக பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய மகனா..
தீயவனாக.. மந்த புத்தியுள்ள நீண்ட காலம் வாழும் மகனா.. யார் தேவை?
"இறைவா! வாழ்நாள் குறுகியதாய் இருப்பினும்
அறிவார்ந்த ஒரு குழந்தையே எங்களுக்குப் போதும்..
எனவே அப்படி ஒரு குழந்தையை எங்களுக்கு தந்தருள வேண்டும் சுவாமி
இதுவே இந்த அடியவனின் வேண்டுகோள்
மிருகண்டா.. நீ விரும்பியது போலவே எல்லாம் நலமாக அமையட்டும்
சில காலம் கழித்து..
கருவுற்ற மருதவதி ஒரு மகனை ஈன்றெடுத்தாள்..
மகிழ்ச்சியடைந்த பெற்றோர்கள்
அவனுக்கு "மார்க்கண்டேயன்" என்று பெயர் சூட்டினர்..
மார்க்கண்டேயனும் பரம சிவன் மீது மிகத்தீவிரமான பக்தி கொண்டிருந்தான்..
அவனை அனைவரும் விரும்பினர்..
அவனது ஆசிரியர்களாலும் அவன் மிகவும் நேசிக்கப்பட்டான்..
மார்கண்டேயனின் குழந்தைப் பருவம்
மிகவும் மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருந்தது..
அவன் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனாக இருந்தான்..
பதினாறாம் ஆண்டு மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது.
மிருகண்டருக்கும் அவர் மனைவிக்கும்
தாங்கள் மிகவும் நேசிக்கும் மகனை
இழக்க வேண்டிய நிலை வருமோ என்று பயந்து கொண்டிருந்தனர்..
பெற்றோரின் வாடிய முகத்தை கவனித்த மார்க்கண்டேயன்,
"தந்தையே, நீங்கள் ஏன் மிகவும் சோகமாக இருக்கிறீர்கள்?"
"மகனே! சிவ பெருமானின் வரத்தின் படி
நீ பதினாறு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்..
அதன்படி பதினாறாம் அகவை உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது..
அதை நினைத்து தான் நாங்கள் இருவரும்