Samayalkaaranin Kavalai | Paramartha Guru(பரமார்த்த குரு)In Tamil | Animation Stories

ஏம்ப்பா…. இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொண்டாப்பா…
கொண்டாரேன்…. சமைச்சதெல்லாம் உங்களுக்குத்தான்…
எனக்கு இல்லாட்டாலும் பரவாயில்லை.. சாப்பிடுங்க…
யோவ்… சாப்பாடு போடும்போது முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கய்யா…
டேய்…. கொஞ்சம் சாம்பார் கொண்டா… கொண்டா….
இங்க ரசம் ஊத்து…
செஞ்ச பொறியல் எல்லாம் நீயே தின்னுட்டியா… எடுத்தாய்யா….
டேய்… ஊ…ஊ... றுகா… போ...போடய்யா…
எனக்கு சோறு வேணும்…
இனிமே உங்களுக்கு என்னால சமைக்க முடியாது….
இந்த முப்பது வருஷ சமையல் வாழ்க்கையில,
இப்படி தின்னவங்களை நான் பாத்ததே இல்லை…
எனக்கு சாப்பாடே இல்லை…
ஐயா… உங்க குருநாதர் எழுந்தா…
நான் என்னோட மாமியார் பொண்ணை பாக்கறதுக்கு,
ஊருக்குப் போறேன்னு சொல்லிடுங்க…
டேய்...டேய்… டேய்… இவன் போயிட்டா நமக்கு யாருடா
அடுத்த வேளைக்கு சமைச்சிப் போடுவாங்க…
டேய்… எதுக்கும் கவலைப் படாதவன் தாண்டா சாமியார் மடத்துக்கு வரணும்…
அடுத்த வேளைய ஆண்டவன் பாத்துக்குவான்...
ம்... நமக்கெல்லாம் ஆண்டவன் அந்த பரமார்த்த குருதான்….
இருந்த சமையற்காரனும் ஓடிட்டான்…
வயித்தைப் பசிக்குது… உங்கள்ல யாருக்காவது சமைக்கத் தெரியுமா?
சாப்பிடத்தான் தெரியும் குருநாதா…
ஹ...ஹ… ஹா… நீங்க சாப்பிடறதைப் பாத்துதான் அவன் ஓடிட்டானே…
ம்… என்ன செய்யலாம்?
பிச்சை எடுக்கலாம்னா இந்த ஊருல போடமாட்டாங்க…
ஏன் குருநாதா?
இது ஒரு சோம்பேறி மடம்னு ஊரு ஜனங்களுக்குத் தெரிஞ்சு போச்சே…
என்ன….. செ… செ...ய்யலாம்… குரு… நாதா?
ஏதாவது வெளியூர் போகணும்…
ஆனா என்னால நடக்க முடியாது…
மாடு குதிரைன்னு ஏதாவது கிடைச்சா சவுரியமா இருக்கும்….
குருவே… குருவே… பக்கத்து தெருவுல ஒருத்தன்… பொதிமாடு வாடகைக்கு விடறான்…
அதை நான் போயி புடிச்சிட்டு வரட்டுமா…
டேய் நல்லா சுமக்கற மாடா பாத்து...புடிச்சிட்டு வாடா….
இல்லைன்னா மாட்டை நாம சுமக்க வேண்டி வரும்.... ஹ...ஹ…ஹ...ஹ… ஹா…
மூடா…
சொல்லுங்க குருநாதா….