Seedanai Muzhungiya Aaru | Paramartha Guru(பரமார்த்த குரு)In Tamil | Animation Stories
Log in
YouTube
by
gonerillearaen
குருநாதா…. அங்க ஒரு படகு போகுது….
அதுல ஏறி அக்கரைக்கு போயிடலாம் குருநாதா…
அதுல படகோட்டியும் இல்ல.. துடுப்பும் இல்ல…
எப்படி போறது… சும்மா இருங்க..
ஆறு எத்தனை ஆழம் இருக்கும் குருநாதா?
நீ எங்க இறங்கினாலும் அது தலைக்கு மேல போகும்…
ஐயையோ… எனக்கு நீச்சல் தெரியாதே…
அட… பயப்படாதடா… நான் உன்னை தூக்கிட்டுப் போறேன்…
போகலாமா குருநாதா…
இருங்கடா… உப்பு மூட்டைங்களையே முழுங்குன இது ஒரு பொல்லாத ஆறு…
எப்படி குரு…
என்னோட நண்பன் குப்புநாதன் ஒரு பெரிய உப்பு வியாபாரி…
ஒரு நாள் குதிரையில நாலு உப்பு மூட்டைங்கள எடுத்துகிட்டு…
இந்த ஆத்தைக் கடக்க வந்திருக்கான்…
அவன் போன ஜென்மத்துல எருமையா இருந்ததனால…
எங்க தண்ணிய பாத்தாலும் அஞ்சு நாழிகை குளிப்பான்…
அன்னிக்கு உப்புமூட்டையோட
குதிரையை தண்ணிக்குள்ள நிறுத்திட்டு குளிச்சிருக்கான்…
கரைக்கு வந்து பாத்தா…
மூட்டை சாக்கு அப்படியே இருக்கு…
உள்ள இருக்க உப்பெல்லாம் காணோம்…
இந்த பொல்லாத ஆறு… உப்பையெல்லாம் முழுங்கிடுச்சி…
இது ரொம்ப பொல்லாத ஆறு…
ஐயையோ… பயமா இருக்குதே குருநாதா…
பயப்படாதே… நான் எதுக்கு இருக்கேன்…
என்ன… ஆறு முழிச்சிகிட்டு கோபமா இருக்கும் போது நாம கடக்கக் கூடாது…
தூங்கும் போது சுலபமா போயிடலாம்…
ஓ.. அதை எப்படி தெரிஞ்சிக்கறது குருநாதா…
ராத்திரிக்கு அது தூங்கும் போது…
ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து தண்ணிக்குள்ள விடணும்…
ஓஹோ…
அது… உஸ்…. ஸுன்னு சத்தம் போட்டா…
முழிச்சிகிட்டு இருக்குதுன்னு அர்த்தம்…
சத்தம் போடலைன்னா… தூங்கிகிட்டு இருக்குதுன்னு அர்த்தம்…
இருட்டுன பிறகு, நான் போய் பரிட்சை செஞ்சு பாக்கறேன் குருநாதா…
சரி…
துஷ்டனைக் கண்டா தூர விலகுன்னு… தள்ளி நின்னு பரிசோதனை செய்…
சரி குருநாதா…
குருநாதா…