Seedargal Vaangiya Oosi | Paramartha Guru(பரமார்த்த குரு)In Tamil | Animation Stories

இதுஎன்னது ஊசி மொன்னையா இருக்கே…
சரியா தைக்க மாட்டேங்குதே... டேய் மட்டி…
ம்…
இங்க வாடா… கடைக்குப் போயி ஒரு நல்ல ஊசி வாங்கிட்டு வாடா...
நான் விளையாடிகிட்டு இருக்கேன் குருநாதா… முட்டாளை போக சொல்லுங்களேன்…
நான் தான் விளையாட்டுக்கே தலைவன்… நான் எப்படி குருநாதா போக முடியும்….
சரி உங்களுக்குள்ள எதுக்கு போட்டி…
ஊசிங்கறது வாழ்க்கையில ஒரு முக்கியமான பொருள்…
பிரிந்ததை ஒன்று சேர்க்கும் பொருள்…
அதனால நீங்க எல்லாரும் சேர்ந்தே போயி வாங்கிட்டு வாங்க…
சரி எல்லாரும் வாங்கடா…
கடைக்காரரே… ஒரு ஊசி குடுங்க…
எதுக்கு வேணும்…
எங்க குருநாதரோட, ஆடை கிழிஞ்சிபோச்சு… தைக்கணும்…
இந்தாங்க ஊசி… கால்பணம் குடுங்க…
என்ன இவ்வளவு சின்னதா இருக்கு… எங்களுக்கு வேண்டாம்…
ஊசி ஒ...ண்ணு… குடுங்க.. நல்ல ஊசியா…
எங்க குருநாதர் அஞ்சு பேரை அனுப்பியிருக்கார்ன்னா…
அந்த ஊசி எத்தனைப் பெருசா இருக்கணும்… பெருசா குடுங்க…
ஏய்… இங்க பாரு… இது தாம்பா தைக்கற ஊசி…
எங்க குருநாதர் ஒண்ணும் அறிவு கெட்டவரு இல்ல…
அவரு என்ன சொன்னாலும் காரணம் இருக்கும்…
நாங்க அஞ்சு பேரும் தூக்கிட்டு போற மாதிரி பெரிய ஊசியா குடுங்க…
ம்… மண்டைக்குள்ள ஒண்ணுமே இல்லாத பசங்களா இருப்பாங்க போல இருக்கே….
அந்த உதவாத வெட்டிப் போட்ட பனை மரத்தை வித்துட வேண்டியது தான்…
ஓ… பெரிய ஊசியா கேக்கறீங்களோ… இதை முதல்லயே சொல்லக்கூடாது…
அதோ வெளிய கிடக்கற ஊசியை 20 பணம் குடுத்துட்டு எடுத்திட்டு போங்க..
பாத்திங்களாடா… பாத்திங்களா…
சாமர்த்தியம் இல்லாம போனா நல்ல பொருள் வாங்க முடியாது… தூக்குங்கடா ஊசிய….
என்னடா இது… என்னத்தை தூக்கிட்டுப் போறீங்க…
எங்க குருநாதருக்கு ஊசி வாங்கிட்டுப் போறோம்…
ஊசியா… இந்த மாதிரி ஊசியை நான் பாத்ததே இல்லயேப்பா…
ம்..க்கும்.. கற்றது கைமண்ணளவு… கல்லாதது உலகளவு…
எங்க குருநாதர்கிட்ட வந்து பாடம் படிங்க..
உங்களுக்கும் இதைப் பத்தி தெரியும்…
என்னது… பனைமரத்தை தூக்கிட்டு வர்றானுங்க… என்னடா இது…
உங்க உடைகளை தைக்க ஊசி குருநாதா…
ஒருவேளை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ…
நமக்கு தெரியாது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ளக் கூடாது…