Tulasi (துளசி) | Indian Mythological Stories | Tamil Stories

துளசி
துவாரகை அரண்மனையில்
கிருஷ்ணன் இருக்கும் ஒவ்வொரு நாளும்
கூட்டம் அலைமோதும்..
அங்கிருந்த அனைவருமே கிருஷ்ணனை விரும்புவார்கள்..
ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி உட்பட
அனைவருமே தங்களின் சொந்த வேலையை விட்டுவிட்டு,
கிருஷ்ணருக்கு பணிவிடை செய்யும் வேலையை விரும்பிச் செய்தனர்..
அவர்களில் சத்யபாமா மிக அழகானவள்..
அவள் சத்ரஜித் என்னும் அரசனின் மகள்..
அவள் தன் அரச பரம்பரை குறித்து சற்று கர்வமும் கொண்டிருந்தாள்..
ஆனால் கிருஷ்ணரின் முதல் மனைவியான ருக்மணி
துவாரகையின் முதல் அரசி என்ற பட்டம் இருந்தும்
எளிமையாகவும், கிருஷ்ணரிடம் பக்தியுடனும் இருந்தாள்..
அக்கா! நாம் நம் கணவருக்கான பணிவிடைகளை செய்து கொண்டிருக்கும் பொழுது
அந்த சத்யபாமா மட்டும்
ஏன் அதை நம்மிடமிருந்து தட்டிப்பறித்து விடுகிறாள்?
ஜாம்பவதி! சத்யபாமாவைப் பற்றி கோபம் கொள்ளாதே..
அவள் நம்மை விட இளையவள்..
எனவே அவளுக்கு உண்மை எதுவென புரிந்து கொள்ள
இன்னும் சிறிது நாட்கள் ஆகும்
ஆனால், அக்கா... இன்று, கிருஷ்ண பெருமான் உங்கள் அரண்மனையில் தங்க வேண்டும்.
ஆனால் சத்யபாமா இன்னும் அவரை அனுப்பவேயில்லை
பரவாயில்லை.. ஜாம்பவதி..
என் இறைவன் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறார்..
அவர் விரும்பும் பொழுது அவரே இங்கே வருவார்
ஒரு நாள் நாரதர்
ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகை அமைந்திருக்கும் துவாரகைக்கு வருகை புரிந்தார்..
அங்கே முற்றத்தின் அருகே மலர்ந்திருக்கும்
பூக்களின் அழகில் மயங்கி நின்று கொண்டிருந்த சத்யபாமாவைச் சந்தித்தார்..
"நாராயண ... நாராயண ...
அரசி சத்யபாமாவிற்கு என் வாழ்த்துக்கள்..
என் வருகையின் நோக்கம் குறித்து சந்தேகப் படாதீர்..
எனக்கும் வயதாகிவிட்டது..
கிருஷ்ணரை நேசிப்பதில் சிறந்தவள் யார்?
நீங்களா?.. அல்லது அந்த ருக்மணியா?
நாரதரே.. நீங்கள் என்ன சொல்கிறீர்
உமக்கு யார் இதை சொன்னது?
துவாரகையைச் சுற்றி அனைவரும் அவர்களின் காதலைப் பற்றித் தான் பேசுகின்றனர்..